உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: வியாபாரிகள் வாக்குவாதம்

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: வியாபாரிகள் வாக்குவாதம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் பிரச்னை செய்ததால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ய வந்த நகராட்சி அதிகாரி பணி செய்யாமால் திரும்பி சென்றார். தமிழக அரசால் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லிக்குப்பத்தில் அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்காததால் பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் தாராளமாக பயன்படுத்துகின்றனர். நகராட்சி துாய்மை மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன் தலைமையில் ஒப்பந்த பணியாளர்கள் 10 பேர் நேற்று கொத்வாபள்ளியில் மளிகை கடையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தகவலறிந்த வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், ஆசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எதை பயன்படுத்தலாம் என கூறுங்கள். பிளாஸ்டிக் பைகள் தராவிட்டால் மக்கள் தகராறு செய்கின்றனர். பிளாஸ்டிக் உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வியாபாரிகளை பிடிப்பது தவறு என துாய்மை மேற்பார்வையாளரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அவர் பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்லாமல் திரும்பி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை