மேலும் செய்திகள்
எஸ்.வி.எஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை
14-Aug-2025
சேத்தியாத்தோப்பு, : வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்ற பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விளையாட்டுத்துறை சார்பில் குறுவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் சுற்றி வட்டாரங்களில் உள்ள பள்ளிகள் பங்கேற்று விளையாடின. தடகளம், சிலம்பம், எறி பந்து, மேசைப்பந்து, இறகு பந்து போன்ற போட்டிகளில் 40 மாணவர்களும், 51 மாணவிகளும் பல்வேறு வயது பிரிவுகளில் பங்கேற்று அனைத்து போட்டிகளிலும் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். இம் மாணவர்களை பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ் ஆகியோர் பாராட்டினர். போட்டிகளில் சாதனை பெற காரணமான பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் துரை, ராஜேஸ்வரி ஆகியோரையும் பாராட்டி சான்று வழங்கினர்.
14-Aug-2025