உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் கோப்பை போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

முதல்வர் கோப்பை போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

கடலுார்: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், மாநில அளவில் பதக்கம் வென்றவர்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டினார்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களின் விளையாட்டு ஆர்வத்தை துாண்டும் வகையில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, கடலுார் மாவட்டத்தில் 10 முதல் 14ம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 17 முதல் 19ம் தேதி வரை கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கும், 20ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 21 மற்றும் 22ம் தேதிகளில் அரசுப் பணியாளர்களுக்கும், 23, 24ம் தேதிகளில் பொதுப்பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது.மாநில அளவிலானப் போட்டிகள் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடந்தது. இதில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 698 பேர் பங்கேற்றனர். அதில், 3 தங்கம், 8 சில்வர், 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.நிகழ்ச்சியில் விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், பி.ஆர்.ஓ., நாகராஜபூபதி மற்றும் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ