உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கேரம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கேரம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

புவனகிரி: மாவட்ட அளவில் நடந்த கேரம் போட்டியில் வண்டுராயன்பட்டு பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 3 பேர் பரிசு பெற்றனர் . மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நெய்வேலி என்.எல்.சி., பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் புவனகிரி அடுத்த வண் டுராயன்பட்டு அரசு ஆதிதிராவிடர் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 வகுப்பு மாணவன் அகிலன் கேரம் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், பத்தாம் வகுப்பு மாணவி சிவப்பிரியா மூன்றாம் இடமும், ஏழாம் வகுப்பு மாணவி யோகேஷ்னி இரண்டாம் இடமும் பிடித்த னர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயவன், உதவி தலைமை யாசிரியர் காமராஜ், உடற்கல்வி இயக்குனர் அண்ணாமலை, உடற்கல்வி ஆசிரியர் செந்தில் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி ஊக்க பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !