உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கிள்ளை: சிதம்பரம் அருகே கராத்தே போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது. வடலுாரில், மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், சிதம்பரம் அடுத்த மேல் அணுவம்பட்டு வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சண்டைபோட்டியில் லத்தீஷ்குமார், இமோதன்ராஜ் முதலிடமும், தர்ஷன் இரண்டாமிடமும் பெற்றனர்.கலர் பெல்ட் பிரிவில் சாரதி, சபரிஷ், அனலிகா, லக்சனா, ஸ்ரீ லக்ஷிகா ஆகியோர் மஞ்சள் பெல்டும், ரச்சிதன், சுதிஷா ஆகியோர் பச்சை பெல்டும் பெற்று வெற்றிப்பெற்றனர். வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துலட்சுமி தலைமை தாங்கினார். கராத்தே ஆசிரியை ரம்யாதேவி முன்னிலை வகித்தார். வெற்றிப்பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சண்முகம், சென்சாய் ரங்கநாதன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். விழாவில், ஆசிரியர்கள் பிரியதர்ஷினி, தனலட்சுமி, அபிநயா, ஜனனி, தவமணி, பரமேஸ்வரி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை