உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காந்தி சிலைக்கு காங்., மரியாதை

காந்தி சிலைக்கு காங்., மரியாதை

புவனகிரி : புவனகிரியில் காங்., சார்பில் காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைத் தலைவர் விநாயகம், நிர்வாகிகள் நாகராஜன், லட்சுமணன், முகமது அலி, ஜோதி, பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். சம்பத் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மாசிலாமணி, ரவி, அகமதுல்லா, ஜாபர், பெருமாள், ஜோதி பங்கேற்றனர். அருள்ஜோதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ