உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொகுதி பொறுப்பாளர் அதிரடி

தொகுதி பொறுப்பாளர் அதிரடி

தமிழகத்தில், பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ள தி.மு.க., வரும் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க, கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் கட்சியை துவக்கி, மாநாடு நடத்திய பிறகு, தி.மு.க., தலைமை கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் மேலும் தீவிர காட்ட துவங்கியுள்ளது.அந்த வகையில், தமிழக முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. தொகுதி பொறுப்பாளர்கள் அந்தந்த சட்டசபை தொகுதியில் உள்ள நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணித்து கட்சி தலைமைக்கு தகவல் அனுப்பி வருகின்றனர்.சிதம்பரம் சட்டசபை தொகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை இரு நாட்கள் நடந்தது. இத்தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பாரிபாலன், தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர செயலாளர் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் முகாம் நடந்த நாளில் காலை முதலே பேசி புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் எனவும், முகாமை ஆய்வு செய்ய நேரடியாக வருவதாகவும் கூறியுள்ளார்.தொகுதி பொறுப்பாளர் எந்த முகாமிற்கு வருவரோ என தெரியாததால் தொகுதிக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் காலை முதலே முகாமிற்கு சென்று செல்பி எடுத்து, பொறுப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களும் 'ப' வைட்டமின் கவனிக்கப்பட்டதால் ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களும் சுறுசுறுப்பாக இயங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை