கலந்தாய்வு கூட்டம்
கடலுார் : கடலுார் செம்மண்டலத்தில் அரிமா வட்டார கலந்தாய்வு கூட்டம் நடந்தது.வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் முன்னாள் மாவட்ட ஆளுநர் கல்யாண்குமார், வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைப்பாளர் கமல் கிஷோர் ஜெயின் பேசினர். மண்டலத் தலைவர் உமாசங்கர், சங்க சேவையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.தேவ், அசோக், குருநாதன், பாடலி சங்கர், திருமலை வாழ்த்தி் பேசினர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகளின் சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.முருகானந்தம் நன்றி கூறினார்.