உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் 

விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் 

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உற்பத்தியை பெருக்குவது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆலையின் செயலாட்சியர் ரமேஷ் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் முத்துசாமி, செந்தில்ராயர், வேல்முருகன், இளவரசன், செல்வராசு, அண்ணாதுரை, ஆலையின் அலுவலக மேலாளர் ஜெய்சங்கர், கணக்கு அலுவலர் ரமேஷ், தலைமை ரசாயன அலுவலர் செல்வேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் வரவேற்றார். விவசாயிகள் கட்டாயம் கரும்பு செய்து ஆலை நலிவடையாமல் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆலையில் அங்கத்தினராக உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் ஒரு ஏக்கராவது கரும்பு நடவு செய்து ஆலைக்கு வெட்டி அனுப்ப வேண்டும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கரும்பு அலுவலர் ராஜதுரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை