ஆலோசனை கூட்டம்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., லாமேக் தலைமை தாங்கி, 'அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வழியாக மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டுமென' விழா ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உடனிருந்தார்.