உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பணி நீக்கம் வதந்தியால் ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை; அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பரபரப்பு

பணி நீக்கம் வதந்தியால் ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை; அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பரபரப்பு

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, கடந்த 2013ம் ஆண்டில் பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றது. அதனைத் தொடர்ந்து, 6000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.இதில் 207 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நிரந்தரம் செய்ய கோரி போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.அதே சமயம், 2013ம் ஆண்டுக்குப் பின், பல முறை ஒப்பந்த ஊழியர்களை வேலையை விட்டு நீக்க அரசு முடிவு செய்து, முடிவை மாற்றியுள்ளது.இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், நேற்று 1ம் தேதி, காலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோரை, பல்கலை நிர்வாகம் வேலைக்கு வர வேண்டாம் என கூறியதாக தகவல் பரவியது.அதனைத் தொடர்ந்து, ஒப்பந்த ஊழியர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த சிதம்பரம் எம்எல்.ஏ., பண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமறான் துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அருள்செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், நிர்வாகம் தரப்பில், ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அது வெறும் வதந்தி என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை