உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

பெண்ணாடம்: மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த ஒப்பந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பெண்ணாடம் அடுத்த கோனுாரைச் சேர்ந்தவர் திருவேங்கடம்,55; பெண்ணாடம் மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக (எலக்ட்ரீசியன்) ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்தார். இவர் கடந்த 2ம் தேதி அதே பகுதியில் பாசன மோட்டார்களுக்கு செல்லும் மின்பாதையில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரை நிறுத்தி விட்டு, அதில் ஏறி, சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி திருவேங்கடம் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை