மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
கடலுார்; கடலுார் அரசு மருத்துவமனையில் நாகப்பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள புறநோயாளிகள் சீட்டு பதிவு இடத்தின் அருகில் நேற்று மதியம் நாகப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது. இதனை கண்டு திடுக்கிட்ட நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு நிலவியது.இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து 4 அடி நீளமுள்ள நாகம்பாம்பை பிடித்துச் சென்றார்.