மேலும் செய்திகள்
கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
01-Aug-2025
கடலுார் : கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025---26ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி சேர்க்கைக்கு வரும் 22ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலுார் மண்டல இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025---26ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் காலம் ஒரு ஆண்டு. இப்பயிற்சி இரண்டு பருவ முறைகள் கொண்டது. பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி + பட்டயப்படிப்பு தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சியில் சேரலாம். 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 17வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. தற்போது விண்ணப்பிப்பதற்கான தேதி வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளமான www.tncu.tn.gov.inமூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.3, கடற்கரை சாலை, சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகம், கடலுார் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04142 222619 என்ற தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
01-Aug-2025