உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கூட்டுறவு வார விழா

 கூட்டுறவு வார விழா

கடலுார்: கடலுார் சரவணபவ கூட்டுறவு அங்காடியில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, தலைமை தாங்கி கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார். பின், உறுதிமொழி ஏற்கப்பட்டு, கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துதல் தொடர்பாக சர்வதேச கூட்டுறவு ஆண்டு, 2025ஐ முன்னிட்டு கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் சொர்ணலட்சுமி, கடலுார் சரக துணைப்பதிவாளர் துரைசாமி, கூட்டுறவுதுறை சார் பதிவாளர்கள், சங்க பணியாளர்கள், எம்.ஜி.ஆர்., கூட்டுறவு நிலைய மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ