மேலும் செய்திகள்
ஓய்வு ஆசிரியர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா
10-Mar-2025
சிதம்பரம் : சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் துவக்கப் பள்ளியில் பவள விழா நடந்தது. நிர்வாகக் குழு துணைத்தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். கணேசன் முன்னிலை வகித்தார். ஆசிரியை சாய்பிரியா வரவேற்றார். தலைமை ஆசிரியை அமுதவாணி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பூலாமேடு அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை தேவி பங்கேற்றார். குமராட்சி வட்டாரக் கல்வி அலுவலர் குமார், சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பேசினார். பரதநாட்டியம், புராண நாடகம், குழு நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கலியபெருமாள், தனபாலன், பேராசிரியை கிருபாஹரி, ஆசிரியர்கள் புகழேந்தி, பூங்குழலி, தேன்மொழி மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.ஆசிரியை கீதா நன்றி கூறினார்.
10-Mar-2025