உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வருவாய் துறையில் குளறுபடி; கிராம மக்கள் அதிருப்தி

வருவாய் துறையில் குளறுபடி; கிராம மக்கள் அதிருப்தி

வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் 53 வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய வேப்பூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர்.இந்நிலையில், வேப்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சுவாமியின் பெயரை கொண்ட நபரின் ரேஷன் கார்டில் உள்ள அவரது மகள் பெயர் திடீரென நீக்கப்பட்டது. இதனையறிந்த பாதிக்கப்பட்ட வேப்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவரின் மூதாட்டி ஒருவரின் ரேஷன் கார்டும் முடக்கப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலகத்தில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ரேஷன் கார்டு தொடர்பாக குளறுபடி நடப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற முடியாமல் அவதியடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !