உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாற்று ராஜன் கரை சாலையில் விரிசல்

வெள்ளாற்று ராஜன் கரை சாலையில் விரிசல்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு ராஜன் கரை சாலை ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் உள்வாங்கி பிளவு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.சென்னை-கும்பகோணம் சாலையில் சேத்தியாத்தோப்பு வடக்குமெயின்ரோட்டில் துவங்கும் வெள்ளாறுராஜன்கரை, குமார உடைப்பு வாய்க்கால் வரை செல்கிறது. வெள்ளாறுராஜன் கரை சாலையில் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலுார், விழுப்புரம், வேலுார் உள்ளிட்ட பஸ்களும், கனரக லாரிகளும் 24 மணிநேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. வெள்ளாறுராஜன் கரையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சாலை உள்வாங்கி உடைப்பு ஏற்பட்டது. பின் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் வாய்க்கால் கரையில் மணல் மூட்டைகளை அடுக்கி , பின் மண்கொட்டி தார்சாலை அமைத்தனர்.கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், கனமழையால் சாலை உள்வாங்கி பிளவு ஏற்பட்டதால், மீண்டும் சீர் செய்து சாலை அமைத்தனர். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை துவங்கி கனமழை பெய்யும் நேரத்தில் சாலை உள்வாங்கி பிளவு ஏற்படுகிறது.கடந்த 15ம் தேதி கன மழை பெய்ததை தொடர்ந்து சாலை விரிசலுடன் பிளவு எற்பட துவங்கியுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து தொடர் பிளவு ஏற்படும் வெள்ளாறுராஜன் கரை சாலைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் ,வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி