மேலும் செய்திகள்
பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
23-Sep-2024
ஆவட்டி அடுத்த கல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 33; இவர், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் அவரது மனைவி அம்பிகா, 20; கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மணி கொடுத்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். டிராக்டர் மோதி முதியவர் பலி
பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி, 66; இவர், நேற்று முன்தினம் காலை பெண்ணாடம் மேற்குரத வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி காயமடைந்தார். உடன், அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் இறந்தார். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மாடு முட்டி தொழிலாளி பலி
மேல்மலையனுாரைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் ராஜதுரை, 26; இவர், நெல்லிக்குப்பம் அடுத்த பல்லவராயநத்தம் கிராமத்தில் விவசாய பணி செய்து வந்தார். இவர், நேற்று மாலை பல்லவராயநத்தத்தில் இருந்து கடலுாருக்கு பைக்கில் சென்றார். கீழ் அருங்குணம் அருகே குறுக்கே வந்த மாடு திடீரென அவரை முட்டி தள்ளியது. தடுமாறி கீழே விழுந்து, படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் தற்கொலை
திட்டக்குடி அடுத்த இ.கீரனுாரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 38; கூலித் தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. நேற்று காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் வீட்டில் துாக்கு போட்டு இறந்தார். திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Sep-2024