உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயிர் காப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பயிர் காப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறுபாக்கம், : மங்களூர் ஒன்றிய வேளாண் துறை சார்பில் நடப்பாண்டு ரபி பருவ பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரை சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்ய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி அடரியில் நடந்தது.வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் கலந்துகொண்டு, துண்டு பிரசுரங்களை வழங்கி, பயிர் காப்பீடு திட்டத்தின் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். மேலும், அக்., 31ம் தேதிக்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.அப்போது, பயிர் காப்பீடு திட்ட உதவி இயக்குனர் கதிரேசன், வேளாண் உதவி இயக்குனர் கீர்த்தனா, வேளாண் உதவி அலுவலர் கணேஷ் பாலன், ஆத்மா திட்ட அலுவலர்கள் தமிழ் ஆனந்த், முத்துசாமி, செல்லமுத்து உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ