உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பயிர் மேலாண்மை பயிற்சி

 பயிர் மேலாண்மை பயிற்சி

விருத்தாசலம்: சிறுகாலுார் கிராமத்தில் நடந்த விதை உற்பத்தி மற்றும் பயிர் மேலாண்மை பயிற்சியில் ஏராளமான விவ சாயிகள் பங்கேற்றனர். கீரப்பாளையம் அடுத்த சிறுகாலுார் கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், பயிர் வகை பயிர்களில் விதை உற்பத்தி மற்றும் பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, பயிர் வகை பயிர்களில் விதை உற்பத்தி, சாகுபடி தொழில்நுட்பங்கள், நிலம் தயாரிப்பு, விதை நேர்த்தி செய்யும் முறை, புதிய ரகங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த களை நிர்வாகம், நுண்ணுாட்ட கலவையின் பயன்பாடு, மண் மற்றும் நீர் பரிசோதனை முறை மற்றும் இலைவழி மூலமாக தெளிக்கும் முறை பற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினார். இந்த பயிற்சியில், வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !