உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்கூல் பேக் வாங்க கடைகளில் கூட்டம்

ஸ்கூல் பேக் வாங்க கடைகளில் கூட்டம்

கடலுார்:கடலுாரில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதையொட்டி, ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்கள் கடைகளில் குவிந்தனர்.தமிழகம் முழுதும் கோடை விடுமுறை முடிந்து இன்று (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் பிரதானமாக பள்ளிக்கு தேவையான ஸ்கூல் பேக் வாங்குவதற்காக கடலுாரில் பிரதான சாலைகளில் உள்ள கடைகளில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குவிந்தனர். சிறு குழந்தைகளுக்கு கார்ட்டூன் படங்கள் இடம் பெற்றிருந்த ஸ்கூல் பேக்குகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை