அடைவுத்திறன் தேர்வில் கடலுார் மாவட்டம் 2ம் இடம் கல்வி அமைச்சர் மகேஷ் தகவல்
கடலுார்: மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வில், கடலுார் மாவட்டம் 2ம் இடம் பிடித்துள்ளது என, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான மாநில அளவிலான அடைவுத் திறன் மீளாய்வுக் கூட்டம், கடலுார் அருகே குமராபுரம் கிருஷணசாமி பொறியியல் கல்லுாரி அரங்கத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் மகேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கடலுார் மஞ்சக்குப்பத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் தங்கி பயிலும் வகையில் 19.33 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் விடுதி வசதிகளுடன் கட்டடங்கள் கட்டும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போ து அமைச்சர் மகேஷ் கூறுகையில், அடிப்படை எழுத்தறிவு திறன் மற்றும் எண்ணறிவு திறனை பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், எண்ணும் எழு த்தும் திட்டம் துவக்கப்பட்டு, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன டைந்து வருகின்றனர். மணற்கேணி செயலி மூலம், நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை எளிமையான முறையில் டிஜிட்டல் வழியில் முப்பரிமாண வடிவத்தில் 1 முதல் பிளஸ்2 வரை பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடலுார் மாவட்டம் 10வது இடம் பிடித்து முன்னேற்றம் அடைந்துள்ளது. அடுத்தவரும் தேர்வில் முதல் 5 இடங்களுக்குள் வர வாழ்த்துக்கள். மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் பிளஸ்2 பயின்ற 193 மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக சேர்ந்துள்ளனர். கடலுார் மாவட்டம் மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வில் 2ம் இடம் பெற்றுள்ளது என, தெரிவித்தார். நி கழ் ச்சியில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் முத்துக்குமார், பயிற்சி கலெக்டர் மாலதி, முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி கலந்து கொண்டனர்.