உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கடலுார் மாவட்டத்திற்கு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

 கடலுார் மாவட்டத்திற்கு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

கடலுார்: சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலுார் மாவட்டத்திற்கு வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வரும் 3ம் தேதி நடக்கிறது. அதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் கடலுார் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, வரும் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் விடுமுறை நாளான 3ம் தேதி தேவை ஏற்படின் மாவட்ட கருவூலம், சார் நிலை கருவூலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ