சர்வதேச போட்டியில் பதக்கம் வென்று கடலுார் அரசுக்கல்லுாரி மாணவர் சாதனை
கடலுார்: வியட்நாமில் நடந்த ஒன்பதாவது ஆசிய பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில், கடலுார் அரசுக்கல்லுாரி மாணவர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரி மாணவர் லோகேஸ்வரன். இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம், உத்தரபிரதேசத்தில் நடந்த தேசிய சீனியர் பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியில் இடம்பிடித்து, சர்வதேச போட்டிக்கு தகுதிபெற்றார். கடந்த வாரம் வியட்நாமில் நடந்த ஒன்பதாவது ஆசிய பென்காக் சிலாட் சாம்பியின்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இரண்டாவது முறையாக சர்வதேச அளவிலான போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். பதக்கம் வென்ற மாணவர் லோகேஸ்வரனை கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், மாணவர்கள் பாராட்டினர்.