உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனியார் ஆம்புலன்சிற்கு அனுமதியில்லை; கடலுார் அரசு மருத்துவமனை அறிவிப்பு

தனியார் ஆம்புலன்சிற்கு அனுமதியில்லை; கடலுார் அரசு மருத்துவமனை அறிவிப்பு

கடலுார்; கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து நோயாளிகளை வெளி மருத்துவமனைகளுக்கு ஏற்றி செல்ல தனியார் ஆம்புலன்சிற்கு அனுமதி இல்லை என, அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.கடலுாரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இம்மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரசவம், விபத்து, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு அனுமதி மறுத்து அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.அதில், அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து நோயாளிகளை வெளி மருத்துவமனைகளுக்கு ஏற்றி செல்ல தனியார் ஆம்புலன்சிற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை. நோயாளிகளை ஏற்றிச்செல்ல அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை