உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வளர்ச்சி பாதையில் கடலுார்: அமைச்சர் ராஜ்குமார் பெருமிதம்

வளர்ச்சி பாதையில் கடலுார்: அமைச்சர் ராஜ்குமார் பெருமிதம்

கடலுாரை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வதாக அமைச்சர் ராஜ்குமார் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சராக பொறுப்பேற்று, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். த.வெ.க., வில் கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகி்க்கிறேன். கட்சி வளர்ச்சிப்பணிகள், தமிழக முதல்வர் விஜய் அறிவித்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியில் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஈடுபட்டு வருகிறேன். தனது சொந்த செலவில் கர்ப்பிணிகள், விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் விதமாக மாற்றத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு மதிய உணவு, ஊக்கத்தொகை மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறேன். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடலுார் பஸ் ஸ்டாண்டு, மக்கள் எதிர்பார்க்கும் இடத்தில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடலுார் குண்டு சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என, சட்டசபையில் அறிவித்துள்ளேன். கடலுார் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறேன். மஞ்சக்குப்பம் மைதானத்தில் கட்டப்பட்ட வணிக வளாக கட்டுமான பணிகள் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்டது. முதல்வர் விஜயின் தாய்மாமன் தங்க மோதிர திட்டம், 151, செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை, மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை கடலுாரில் துவக்கி வைத்தேன். மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து துறை ரீதியான அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கான மனுக்களை என்னிடம் அளித்து வரும் நிலையில், அதை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி தீர்வு காண அறிவுறுத்தியுள்ளேன். இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயனடைகின்றனர். கடலுாரை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !