மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடலுார் நைசா அணிகளுக்கு பதக்கம்
கடலுார் : கடலுார் நைசா அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போ்டடி கடலுார் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் கடலுார் மாவட்டத்தில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் 8, 10, 12, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. 2 நாட்கள் நடந்த போட்டியில் கடலுார் நைசா ஏ.பி., அணிகளும், 3வது இடத்தை கேலோ இந்தியா, நெய்வேலி அணியும் பிடித்தன. 10 வயது பிரிவில் நைசா ஏ அணி முதலிடம், 2வது நெய்வேலி அணியும், 3வது இடத்தை நைசா பி அணியும், 3வது இடத்தை நைசா அணியும், கேலோ இந்தியா 3வது இடத்தையும் பிடித்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தலைமை பயிற்சியாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். உதவி பயிற்சியாளர் பப்ரூ பாலாஜி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் இந்திய அணி கபடி வீரர் மணிகண்டன், ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றம் பதக்கம் வழங்கினார்.விழாவில் கால்பந்து வீரர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.