உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கடலுார் போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்

 கடலுார் போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலுார்: கடலுாரில் போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார். கடலுார், துாக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். போலீஸ் ரோந்து வாகன டிரைவர். இவர், அடிக்கடி குடித்து விட்டு வந்ததை அவரது மனைவி திவ்யா, 30; தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து திவ்யா, கடலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், தம்பதியை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, மணிகண்டன், திவ்யாவை தாக்க முயன்றார். இதையடுத்து மணிகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மணிகண்டனை, கடலுார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ