மேலும் செய்திகள்
மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
28-Dec-2025
கடலுார்: கடலுார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மது கடத்தலை தடுக்க எஸ்.பி., தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகையையொட்டி, கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடி வழியாக மது கடத்தப்படுவதை தடுக்க எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, மதுபாட்டில்கள் கடத்திச் செல்லப்படுகிறதா என போலீசார் சோதனை செய்தனர். இதில், மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி.,சார்லஸ் மற்றும் போலீசாரும் உடனிருந்தனர்.
28-Dec-2025