கேலோ இந்தியா இளையோர் கபடி போட்டி கடலுார் மாணவிக்கு வெண்கல பதக்கம்
கடலுார்: கடலுாரைச் சேர்ந்த கபடி வீராங்களை, தமிழக அணிக்காக கேலோ இந்தியா இளையோர் போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார்.கடலுார் அடுத்த ஒதியடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகள் சபிதா,17. கபடி வீராங்கனை. காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி., கம்ப்யூ., சயின்ஸ் முதலாம் ஆண்டு படிக்கிறார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் எக்ஸலன்ஸ் கபடி பயிற்சி மையத்தில், பயிற்சியாளர் நதியாவின் மேற்பார்வையில் பயிற்சி பெற்றார். இவர் பீகார் மாநிலம், ராஜ்கிர்ரில் நடந்த ஏழாவது கேலோ இந்தியா இளையோர் போட்டியில் தமிழக பெண்கள் கபடி அணியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார்.தமிழக அணிக்காக வெண்கல பதக்கம் வென்ற மாணவி சபிதாவிற்கு, திரு.வி.க., கபடி கழகம் சார்பில் பாராட்டுவிழா நடந்தது. வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். கடலுார் மாவட்ட கபடி சங்க செயலாளர் நடராஜன், தேசிய கபடி வீரர்கள் ஞானமுருகன், ஜவகர் விவேக், குமாரசாமி, உடற்கல்வி ஆசிரியர் அருட்செல்வம், சந்தோஷம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவமணி, செல்வமூர்த்தி உட்பட பலர் மாணவியை பாராட்டினர். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாயவேல் நன்றி கூறினார்.