மழையால் வீடு இடிந்து முதியவர் பலி
பண்ருட்டி: கூரை வீட்டில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று காலை, 11: 00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். மழை காரணமாக வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாட்டில் சிக்கிய சீத்தாராமனை உறவினர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.நாகப்பட்டினம்: நாகை, மாவட்டம் செம்பியன் மகாதேவியை சேர்ந்தவர் முருகதாஸ், 40; விவசாய தொழிலாளி. கடந்த 11ம் தேதி இரவு, இவரது மனைவி லட்சுமி, மகன் கவியழகன், 13, மற்றும் 8 வயது மகளுடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கவியழகன் இறந்தார். மற்ற மூவரும் காயமடைந்தனர்.நேற்று கவியழகன் வீட்டிற்கு சென்ற அமைச்சர் மகேஷ் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, பேரிடர் நிவாரண நிதியாக, நான்கு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.