ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
கடலுார் : தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு, கடலுார் வில்வநகரில் நடந்தது.மாவட்ட கன்வீனர் பாவாடை தலைமை தாங்கினார். ஐசிடிஎஸ் ஷீலா அன்பழகி வரவேற்றார். செல்வராஜ், அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் துவக்க உரையாற்றினார். மாவட்ட அமைப்புக்குழு மோகனசுந்தரம், ராம சாமி, ராஜாமணி, கருணாகரன், மச்சேந்திரன், சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ராமநாதன் சிறப்புரையாற்றினார்.மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட செயலாளர் பழனி, டிஎன்ஜிஇஏ மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் நாகம்மாள் வாழ்த்துரை வழங்கினர்.குறைந்தபட்ச ஓய்வூதியம் 7ஆயிரத்து 850 வழங்க கோரியும், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, பண்டிகை முன்பணம், மருத்துவ காப்பீடு, குடும்ப நலநிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ராஜாமணி நன்றி கூறினார்.