ஆர்ப்பாட்டம்
நெய்வேலி: நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 29ல் உள்ள சூப்பர் பஜார் அருகில் சி.ஐ.டி.யூ., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க அலுவலக செயலாளர் சாமுவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ., மாவட்ட இணை செயலாளர் ஜெயராமன், பொதுச் செயலாளர் பழனிவேல், நகர செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, முருகன், ரமேஷ்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் நிலக்கரி கையிருப்பு இல்லாததால் இரண்டாம் சுரங்கத்தில் இருந்து முதல் சுரங்கத்திற்கு லாரிகளில் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. பின், இங்கிருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரி, அனல்மின் நிலையங்களுக்கு மின் உற்பத்திக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், முதல் சுரங்கம் அருகே உள்ள புதிய சேவை பிரிவு முதல் மந்தாரக்குப்பம் வரை லாரிகளில் நிலக்கரி எடுத்து செல்ல தனி பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பொருளாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.