உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துணை மேயர் நிவாரண உதவி

துணை மேயர் நிவாரண உதவி

கடலுார்; கடலுாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, துணை மேயர் தாமரைச்செல்வன் நிவாரண உதவி வழங்கினார்.தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலுார் மாநகரின் பல பகுதிகளில் நீரால் சூழப்பட்டது. கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் கிராமத்தில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கடலுார் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உணவுப்பொருட்கள் வழங்கினார். வி.சி., மாநில துணை செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் பிரபு, ராஜ்குமார், தர்மராஜ், பலராமன், வீரமுத்து, நாராயணன், வேல்முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ