ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
நெய்வேலி டிச. 14-: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட வடக்குத்து, காந்தி கிராமம், அசோக் நகர், சக்தி நகர், ரெயின்போ நகர், வேலுாடையான் நகர், என்.ஜே.வி நகர், தங்கம் நகர், கே.எஸ்.கே.நகர் உள்ளிட்ட, 14 நகர் பகுதியில் மாவட்ட கனிம வளத் துறை நிதியின் மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், சந்தோஷ் குமார், அவைத்தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, துணைச்செயலாளர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், தி.மு.க., கிளை செயலாளர்கள் பிச்சையா, வாஜித், மணிகண்டன், நடராஜன், தாஸ், நிர்வாகிகள் மணிகண்ட ராஜன், பாலு, சிவசங்கரன், பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.