தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஒறையூர் ஸ்ரீபாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.விழாவையொட்டி நேற்று, மூலவர் விநாயகர், பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பால்குடம் எடுத்தல், பிற்பகல் 4:00 மணிக்கு பக்தர்கள் தலையில் மிளகாய்பொடி அபிஷேகம், தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.