கடலுாரில் தர்மசாஸ்தா குருபூஜை விழா
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் தர்மசாஸ்தா ஆசிரமத்தில் மண்டல பூஜை மற்றும் குரு பூஜை விழா நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் சன்னதி வீதியில் உள்ள தர்மசாஸ்தா ஆசிரமத்தில் 47வது ஆண்டு மண்டல பூஜை மற்றும் குரு பூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு 25ம் தேதி கணபதி ஹோமம், விசேஷ திரவிய அபிஷேகம், மஹா தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு ஐயப்ப சுவாமி, இந்திர விமானத்தில் ராஜவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 26ம் தேதி மாலை தேரடி வீதி, சம்பந்தர் கோவிலில் கற்பூர ஆழியை பாடலி சங்கர் துவக்கி வைத்தார். பாடலீஸ்வரர் கோவில் 23கால் மண்டபத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.