உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிஜிட்டல் பேனர்கள் ஆதிக்கம் மாவட்ட அதிகாரிகள் துாக்கம்

டிஜிட்டல் பேனர்கள் ஆதிக்கம் மாவட்ட அதிகாரிகள் துாக்கம்

பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள், மக்கள் பிரதிநிதிகள் வருகை, திருமணம் உள்ளிட் சுப நிகழ்ச்சிகளுக்கு பிரதான சாலைகள், மக்கள் கூடுமிடங்களில் டிஜிட்டல் பேனர்கள் கட்டப்படுகிறது. கடந்த காலங்களில் டிஜிட்டல் பேனர்கள் சரிந்து விழுந்த விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் காரணமாக சென்னை ஐகோர்ட் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும், மாவட்டத்தில் பேனர் கலாசாரம் ஓய்ந்தபாடில்லை. தற்போது, அமைச்சர்கள் வருகை, ஆளுங்கட்சி பிரமுகர்களின் நிகழ்ச்சிகளுக்கு சாலை நெடுகிலும் ‘மெகா’ பேனர்கள் கட்டப்படுகிறது. இந்த பேனர்களில் முதல்வர் விஜய் படம் இருப்பதால், போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், ஆளுங்கட்சிக்கு சளைத்தவர்கள் கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக ஏனைய பிற அரசியல் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மின் கம்பங்கள், நிழற்குடைகள், பிரதான சந்திப்புகளில் பேனர்களை கட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் நகர, ஊரக அமைப்புகளிடம் பேனர் அளவு, எத்தனை நாட்கள், கட்டும் இடம் போன்ற தகவல்களுடன் முன் அனுமதி பெற வேண்டும். அதில், போலீசார் வழங்கிய வரிசை எண் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் தாறுமாறாக கட்டப்படும் பேனர்கள் பலத்த காற்று, மழைக்கு சரிந்து விழுந்து பாதசாரிகள், வாகன ஓட்டிகள் காயமடைவது வழக்கமாகி விட்டது. பாதிப்பு ஏற்பட்டதும், பேனர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதும், ஓரிரு வாரங்களில் மீண்டும் தலைதுாக்குவதும் வாடிக்கையாகி விட்டது. எனவே, மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் பேனர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை