உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தினமலர் - பட்டம் வினாடி வினா மாணவ, மாணவிகள் ஆர்வம்

தினமலர் - பட்டம் வினாடி வினா மாணவ, மாணவிகள் ஆர்வம்

சிதம்பரம்: புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமும் இணைந்து, சிதம்பரம் காமராஜ் பள்ளியில் நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து 'பதில் சொல், பரிசை வெல்' என்ற வினாடி வினா போட்டியை, சிதம்பரம் வேங்கான் தெரு, காமராஜ் பள்ளியில் நடத்தியது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, காமராஜர் மெட்ரிக் பள்ளி முதல்வர் முத்து சக்தி தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். துணை முதல்வர்கள் ரமேஷ், அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டியில் சஞ்சனா, திவ்யபாரதி ஆகியோர் கொண்ட குழு முதலிடத்தையும், மாணவிகள் ஆபியா, ஹர்ஷிதா ஆகியோர் கொண்ட குழு இரண்டாம் இடத்தை பிடித்தனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெயந்தி, கனிமொழி, கவிதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை