உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் போர் போடாததை கண்டித்து கவுன்சிலர் தரையில் படுத்து தர்ணா : நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு

குடிநீர் போர் போடாததை கண்டித்து கவுன்சிலர் தரையில் படுத்து தர்ணா : நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் திடீரென தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பண்ருட்டி நகர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கோதண்டபாணி, கமிஷனர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:ராமகிருஷ்ணன் (தி.மு.க.,): பழைய சார்பு நீதிமன்ற வளாகத்தில் சிறு வியாபாரிகள் அடங்கிய மார்க்கெட் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சேர்மன்: இதுகுறித்து கலெக்டர் ஆய்விற்கு சென்றுள்ளது. பழனி (தி.மு.க.,): கடந்த 2 ஆண்டுகளாக எனது வார்டில் குடிநீர் போர் போடுவதற்கு டெண்டர் விடப்பட்டு யாரும் பணியை எடுக்கவில்லை. இதனை கண்டித்து இங்கேயே படுத்துக் கொள்கிறேன் என்றபடி சேர்மன் இருக்கை எதிரில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. (கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி சமாதானம் செய்து இருக்கையில் அமர வைத்தார்) சேர்மன்: ஐந்து முறை டெண்டர் வைத்தும் யாரும் எடுக்கவில்லை. உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து பணி செய்யப்படும்.சண்முகம் (அ.தி.மு.க.,): முகமதுநபி தெருவில் சிமென்ட் சாலை போடுவதற்கு 3 ஆண்டாக கோரிக்கை விடுத்தும் செய்யவில்லை.சேர்மன்: டெண்டர் விடப்பட்டு பணிகள் செய்யப்படும். கமலக்கண்ணன் (அ.தி.மு.க.,): கும்பகோணம் சாலையில் சோடியம் விளக்கு எரியவில்லை. எரிவாயு தகனமேடைக்கு 65 லட்சம் செலவு செய்தும் எப்போது தான் பிணத்தை எரிப்பீர்கள். குப்பைகள் அள்ளுவதில்லை. கமிஷனர் அலுவலகத்திலேயே உட்கார்ந்திருந்தால் எப்படி பணி நடக்கும்.இவ்வாறு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை