உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தினமலர்

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தினமலர்

கடலுார்:'தினமலர்' நாளிதழின் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் என, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில செயலாளர் திருமலை கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நான் கடந்த 47ஆண்டுகளாக 'தினமலர்' நாளிதழை படித்து வருகிறேன். காலையில் கண்விழித்து எழுந்ததும் முதலில் காண்பது 'தினமலர்' நாளிதழைத்தான். தலையங்கம், உள்ளூர், வெளிநாட்டு செய்திகளை வாசிப்பேன். மாநில, மாவட்ட அதிகாரிகளின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் டீக்கடை பெஞ்ச், பக்க வாத்தியம், மேடைப்பேச்சு, பழமொழி, இதே நாளில் அன்று என்ற தலைப்பில் கீழ் வரும் பல்துறை வித்தகர்களின் சுருக்கமான வரலாறு, அக்கம் பக்கம் பகுதியில் வெளியாகும் அரசியலாளர்களின் நிலைமை, செகன்ட் பிரண்ட்பேஜ் குறிப்பிடத்தக்கது. அரசியல் கார்டூன் படம் ரசிக்க வேண்டிய ஒன்று. சிறுவர் மலர், கோவில்கள் மற்றும் பல்வேறு ஆன்மிக கருத்துகளை வழங்கும் ஆன்மிக மலர், சிறுகதை, பரிசுப்போட்டி என அசத்தும் 'வாரமலர்' இணைப்பு என பாமரரும் பயன்பெறும் வகையில் செயலாற்றுகிறது. மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த 'தினமலர்' நாளிதழின் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை