மேலும் செய்திகள்
'பொது அறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு'
07-Sep-2025
கடலுார் : 'தினமலர்' நாளிதழில் வரும் செய்திகள் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது என, ஓய்வு பெற்ற நுாலகர் சந்திரசேகரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 'தினமலர்' நாளிதழை 1987ம் ஆண்டு முதல் வாசிக்கிறேன். எந்த நேரம் ஆனாலும் தினமலர் நாளிதழை படித்துவிடுவேன். அதில் வரும் செய்திகள் அனைத்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக, வழிகாட்டி, பட்டம் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளது. மக்கள் சார்ந்த செய்திகளை வெளியிடுவ தில் முன்னோடி நாளிதழ். 75ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தினமலர்' நாளிதழ் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
07-Sep-2025