தினமலர் நீட் மாதிரி தேர்வு மாணவர் முகமது பைசல் முதலிடம்
விருத்தாசலம் : 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஜெயப்பிரியா வித்யாலயா இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வில், மாணவர் முகமது பைசல் முதலிடம் பிடித்து அசத்தினார்.விருத்தாசலத்தில் 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஜெயப்பிரியா வித்யாலயா இணைந்து நேற்று நடத்திய நீட் மாதிரி தேர்வினை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். ஓ.எம்.ஆர்., ஷீட்டில் விடையை வட்டமிட்டனர். தொடர்ந்து மாணவர்களின் ஓ.எம்.ஆர்.,விடைத்தாள் திருத்தப்பட்டு இரவு 9:00 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்பட்டது.மாணவர் முகமது பைசல் 720 மதிப்பெண்ணிற்கு 513 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். மாணவி ராஜஸ்ரீ 427மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம், மாணவர் மிதுல் 417மதிப்பெண்ணுடன் மூன்றாம் பிடித்து அசத்தினர்.