உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் ரயில் நிலையங்களில் திண்டுக்கல் எம்.பி., ஆய்வு

கடலுார் ரயில் நிலையங்களில் திண்டுக்கல் எம்.பி., ஆய்வு

கடலுார்: கடலுார் ரயில் நிலையங்களில், திண்டுக்கல் எம்.பி., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திண்டுக்கல் மா.கம்யூ., கட்சி சச்சிதானந்தம் எம்.பி., நேற்று மாலை கடலுார் வந்தார். பின், அவர் கடலுார் துறைமுகம் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே நிலையங்களை பார்வையிட்டு, பயணிகள் வசதிக்கான அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.அப்போது, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத், குடியிருப்போர் சங்கம் தேவநாதன், மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, மீனவர் பேரவை தலைவர் சுப்பராயன் உள்ளிட்டோர், சச்சிதானந்தம் எம்.பி.,யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில், கடலுார் வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப்புலியூர், துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம்-சென்னை பயணிகள் ரயிலை, கடலுார் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். அதுபோல் மயிலாடுதுறை-திருச்சி பயணிகள் ரயிலையும் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். கடலுார் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையங்களின் நடைபாதை முழுவதும் மேற்கூரை அமைப்பதுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை, பெற்றுக்கொண்ட சச்சிதானந்தம் எம்.பி., சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.அப்போது, திருச்சி கோட்ட தலைமை திட்ட மேலாளர் நஷீர் அகமது, கூடுதல் கோட்டப் பொறியாளர்கள் ஜான்சன், நாராயணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி