உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சம்பா நெற்பயிரில் நோய் தாக்குதல்: பெண்ணாடம் விவசாயிகள் கவலை

சம்பா நெற்பயிரில் நோய் தாக்குதல்: பெண்ணாடம் விவசாயிகள் கவலை

பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதியில் சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிர்களில் மர்மநோய் தாக்குதல் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள மாளிகைக்கோட்டம், அரியராவி, திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், தாழநல்லுார், காரையூர், வெண்கரும்பூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் சம்பா நெல் நடவு செய்திருந்தனர். நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ள நிலையில் பயிர்களில் சோலைகள் சருகாக மாறும் மர்மநோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட வாய்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, சம்பா நெல் வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ