உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்கன்வாடி குழந்தைகளுக்கு கலெக்டர் சீருடை வழங்கல்  

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கலெக்டர் சீருடை வழங்கல்  

கடலுார்: கடலுாரில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா வண்ணச் சீருடைகளை கலெக்டர் வழங்கினார். கடலுார் கலெக்டர் கூட்டரங்கில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா வண்ணச் சீருடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கி தொடங்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், 'கடலுார் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகளில் 2,023 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு பயன்பெறும் குழந்தைகளுக்கு சத்தான உணவுடன் கூடிய கல்வி அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களுக்கு தொடர்ச்சியாக வரும் 2 வயது முதல் 6 வயது உள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுடன் கொழுக்கட்டை மற்றும் பிஸ்கட் வழங்கப்படுகிறது. 2 முதல் 5 வயது வரையிலான குழத்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 ஜோடி விலையில்லா வண்ணச்சீருடை வழங்குவதோடு பள்ளி செல்லும் முன் ஆயத்தமாக முன்பருவக்கல்வியும், பராமரிப்பு கல்வி உபகரணங்களும் வழங்கப்படுகிறது' என்றார்.நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை