தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் விநியோகம்
கடலுார்: மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 5ம் தேதி மற்றும் 7 தேதிகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: தமிழக அரசு, தாயுமானவர் திட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் வழங்குகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் 5ம் தேதி மற்றும் 7 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.