மாவட்ட கல்வி அலுவலர் நகராட்சி பள்ளியில் ஆய்வு
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் ஆய்வு செய்தார். வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார். பள்ளி வளாகத்தையும், கழிவறைகளையும் துாய்மையாக பராமரிக்க வேண்டும்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க கண்காணிக்க வேண்டும்.மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அறிவுறுத்தினார். தலைமை ஆசிரியர் தேவனாதன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.