எம்.ஜி.ஆர்., நினைவு தினம் மாவட்ட செயலாளர் அறிக்கை
சிதம்பரம் : எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என கட்சியினருக்கு எம்.எல்.ஏ., பாண்டியன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.இது குறித்து அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கை.அ.தி.மு.க., தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர்., 37ம் ஆண்டுநினைவு தினம், நாளை (24ம் தேதி) அனுசரிக்கப்பட உள்ளது.அன்றைய தினம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள, கிழக்கு மாவட்டத்தில், உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில் முழுவதும் உள்ள, எம்.ஜி.ஆர்., திரு உருவ சிலைகளுக்கும், அவரது படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.